×

நிர்ணய விலை கிட்டுமா? கம்பத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கியது

கம்பம், ஏப்.12: கம்பம் நகராட்சி பகுதியில் மக்களவை தேர்தலுக்காக வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களிடம் பூத் சிலிப் வழங்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஏப்.18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில்,  வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அச்சிடப்பட்டு, அந்தந்த தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு  அனுப்பி வைக்கப்பட்டது.  உத்தமபாளையம்  தாலுகா அலுவலகத்திற்கு வந்த பூத் சிலிப்களை அதிகாரிகள் பாகம் வாரியாக தனியாக பிரித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு அனுப்பிவைத்தனர். கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள  வாக்களர்களுக்கு வந்தடைந்த பூத் சிலிப்களை வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணியினை நேற்று நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)  செல்வராணி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேலாளர் முனிராஜ், கட்டிட ஆய்வாளர் தங்கராஜ், சுகாதார அலுவலர் அரசக்குமார், வருவாய் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளில் 29,262 ஆண், 30,945 பெண் வாக்காளர்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர் என  60 ஆயிரத்து 211 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக நகராட்சிப்பகுதியில் 63 வாக்குச்சாவடிகள் உள்ளன.

Tags : Booth Chilip ,
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...